உள்ளடக்கத்திற்குச் செல்லவும்
June Security Release is available

கூட்டாளிகள் & ஆதரவாளர்கள்

Node.js சமூகம் பல்வேறு வழிகளில் பங்களிக்கும் துடிப்பான கூட்டாளர்களின் வலைப்பின்னலால் செழுமைப்படுத்தப்படுகிறது. இத்தகைய ஒத்துழைப்புகளின் மூலம், எமது வலுவான உள்கட்டமைப்பை நாங்கள் பராமரிக்கிறோம், பாதுகாப்பை பலப்படுத்துகிறோம், புதிய பதிப்புகளை வெளியிடுகிறோம் மற்றும் எமது சூழல் அமைப்பை நிலையான முறையில் வளர்க்கிறோம்.

Node.js-இன் வெற்றிக்கும் அதன் தொடர்ச்சியான வளர்ச்சிக்கும் முக்கியப் பங்காற்றும் எமது கூட்டாளர்களின் ஆதரவிற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.

உள்கட்டமைப்பு

எமது உள்கட்டமைப்பு கூட்டாளர்கள், Node.js திட்டத்திற்கு மிக முக்கியமான ஆதரவை வழங்குகிறார்கள். எமது தொடர்ச்சியான ஒருங்கிணைப்பு மற்றும் சோதனைச் செயல்பாடுகளுக்குத் தேவையான வன்பொருள்களையும் கணினிகளையும் அவர்கள் வழங்குகிறார்கள்; இவர்களது உதவி இன்றி, எங்களால் Node.js-இன் புதிய பதிப்புகளைச் சோதிக்கவோ அல்லது வெளியிடவோ முடியாது.

ஆதரவாளர்கள்

ஆதரவாளர்கள் என்பது OpenCollective வாயிலாக Node.js திட்டத்திற்கு நிதி உதவி வழங்கும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் ஆவர்.

JHSOSP
L
L
BWG
AU
MS
SK

சூழல் மண்டல நிலைத்தன்மை திட்டம் (ESP)

நீங்கள் காலாவதியான (EOL) Node.js பதிப்பைப் பயன்படுத்துகிறீர்களா? OpenJS Ecosystem Sustainability Program (ESP) என்பது, நிறுவனங்கள் தங்களது காலாவதியான பதிப்புகளில் உள்ள செயலிகளைத் தொடர்ந்து பராமரிக்க உதவும் ஒரு திட்டமாகும். நீங்கள் புதிய பதிப்பிற்கு மாறுவதற்கான திட்டமிடலில் இருக்கும்போது, அந்த இடைப்பட்ட காலத்தைச் சமாளிக்க இந்தப் பாதுகாப்புத் திருத்தங்கள், விதிமுறை இணக்க உதவி மற்றும் தொழில்நுட்ப ஆதரவு ஆகியவற்றை இத்திட்டம் வழங்குகிறது. காலாவதியான பதிப்புகளைப் பற்றிய கூடுதல் தகவல்களுக்கு, தயவுசெய்து End-Of-Life Node.js Releases பக்கத்தைப் பார்வையிடவும்

வணிக ரீதியான ஆதரவின் மூலம் காலாவதியான பதிப்புகளைப் பயன்படுத்துவது ஒரு தற்காலிகத் தீர்வாக மட்டுமே கருதப்பட வேண்டும்; அதிகாரப்பூர்வ ஆதரவு உள்ள புதிய பதிப்புகளுக்கு மாறுவதே எப்போதும் இறுதி இலக்காக இருக்க வேண்டும்.

பார்ட்னராக இணைதல்

Node.js திட்டத்தின் கூட்டாளராக இணைந்து, இத்திட்டத்தைத் தொடர்ந்து மேம்படுத்தவும் பராமரிக்கவும் எங்களுக்கு உதவுங்கள். உலகம் முழுவதும் உள்ள மென்பொருள் உருவாக்குநர்களுக்கும் நிறுவனங்களுக்கும் Node.js ஒரு நம்பகமான மற்றும் பாதுகாப்பான தளமாகத் திகழ்வதை உறுதிசெய்ய உங்கள் ஆதரவு மிகவும் அவசியமானது. கூட்டாளராக இணைவதில் உங்களுக்கு ஆர்வம் இருந்தால், தயவுசெய்து OpenJS Foundation மூலம் எங்களைத் தொடர்புகொள்ளவும்.

OpenJS பார்ட்னராக இணைவதற்கு